டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்கு பிறகு நிதியமைச்சர் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று பட்ஜெட் 2023-24க்கு ஒப்புதல் பெறுவார். இன்று பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளும் குடியரசு தலைவருடன் சந்திப்பு மேற்கொண்டனர்.