ஈரோடு கிழக்கு – எகிறி அடித்த எடப்பாடி: அவ்வளவு தானா ஓபிஎஸ் மவுசு?

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகான அரசியல் நகர்வுகளுக்கு வழிவகுக்கும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் உண்மையில் ஓபிஎஸ்ஸின் பலம் என்ன என்பதை அவருக்கே காட்டும் விதமாக இந்த தேர்தல் அறிவிப்பு அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இது தான் ஜெயலலிதா ஸ்டைல்!எந்த தேர்தல் என்றாலும் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து எதிர் கட்சிகளுக்கு மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளுக்கே ஷாக் கொடுப்பது தான் ஜெயலலலிதா ஸ்டைல். கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே அத்தனை தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவித்துவிடுவார். ‘நீங்க வந்தாலும் வராவிட்டாலும் இந்த வண்டி நிற்காது’ என்று கூட்டணிக் கட்சிகளை அலறவிடுவார்.
கூட்டணிக் கட்சிகளுக்கும் ஷாக்! அதன்பின்னர் கேட்ட தொகுதிகள், கேட்ட எண்ணிக்கைகள் கிடைக்காவிட்டாலும் கொடுத்த தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு கூட்டணிகட்சிகள் சம்மதம் தெரிவித்தால், தனது வேட்பாளர்களை மாற்றிவிட்டு கூட்டணிக்கு இடம் தருவார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அந்த வேகம் முற்றிலும் குறைந்து போனது. ஒரு இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை அறிவிப்பதில் இவ்வளவு சுணக்கமா என அதிமுக தொண்டர்களே அலுத்துக் கொள்கிறார்கள்.
எடப்ப்பாடி அறிவித்த வேட்பாளர்நீண்ட இழுபறிக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. அந்த வகையில் ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ள நிலையில் விரைவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாய் திறக்காத பாஜகஇடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்குவோம், பாஜக போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என்று ஓபிஎஸ் அறிவித்தார். ஆனால் பாஜக எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்துள்ள நிலையில் பாஜக வாய்திறக்காதா என கமலாலய வாசலைப் பார்த்து ஓபிஎஸ் காத்து நிற்கிறார். ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியோ, ‘வேட்பாளர் எல்லாம் ரெடி பண்ணி வைத்துவிட்டோம். பாஜக போட்டியிடவில்லை என்று சொல்லிவிட்டால் இப்போதே அறிவித்துவிடுவோம். அவர்கள் தான் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள்’ என்று கூறுகிறார்.
ஓபிஎஸ்ஸிடம் பலம் இல்லையா?“இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு வரை செய்தியாளர்களைச் சந்திப்பதும் சர்ச்சைக்குரிய வகையில் எதையாவது பேசி தொடர்ந்து லைம் லைட்டில் இருந்து வந்த அண்ணாமலை, தேர்தல் அறிவிப்பு வந்ததும் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார். கள்ள மௌனம் சாதிக்கும் பாஜகவை எதிர்பார்த்து நிற்பது தேவைதானா என அதிமுக தொண்டர்களே கேட்கிறார்கள். நாங்கள் போட்டியிடப் போகிறோம் என பாஜக அறிவிக்காத சூழலில் மீண்டும் மீண்டும் அவர்களது வாயை பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் தன்னிடம் பலம் இல்லை என்பதை தான் ஓபிஎஸ் சொல்கிறார்.
ஈரோடு பக்கம் திரும்பாத ஓபிஎஸ்ஒருவேளை பாஜக நாங்கள் போட்டியிடுகிறோம் என்று அறிவித்த பின்னர்கூட ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெறலாமே? அதைக்கூட செய்ய தைரியம் இல்லையா? எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே மாஜி அமைச்சர்களை களமிறக்கி தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார். தற்போது வேட்பாளரையும் அறிவித்துவிட்டார். ஆனால் ஓபிஎஸ் பார்வைகூட ஈரோட்டை பார்த்து திரும்பவில்லை.
அதிமுகவுக்கு இது அழகல்ல!​​
பாஜகவை எதிர்பார்த்து நிற்பது, நான் தான் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொள்வது போன்றவை அதிமுகவில் தன்னை ஒரு தரப்பாக நிலைநிறுத்த பயன்படும் என ஓபிஎஸ் நினைக்கலாம். ஆனால் ஓபிஎஸ்ஸின் நடவடிக்கைகள் எதுவும் அதிமுகவின் கடைமட்ட தொண்டருக்கு கூட ஏற்புடையதாக இல்லை” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.