குரோம்பேட்டையில் செல்போன் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
சென்னை குரோம்பேட்டை ராதா நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை திடீரென கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த பயங்கர தீ விபத்தில் செல்போன் கடையில் இருந்த சும்மா ஒரு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும் இந்த தீ விபத்து குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.