2023 – 24ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இதுவாகும். மேலும் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டும் இதுவே. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டும் இதுவே.
நிதியமைச்சர் நிர்மலா பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்தபோது, “கடந்த பட்ஜெட்டுகல் அமைத்த அடித்தளத்தின்மீது கட்டப்படும் பட்ஜெட்டாக இது அமையும். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், தொழில்துறையினருக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; இது பிற வளர்ந்த நாடுகளைவிட அதிகம். உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. மற்ற உலக நாடுகள் இந்தியாவை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஏற்றுக்கொண்டுள்ளன. பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால் பங்கு சந்தைகள் உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் 552 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்தை தாண்டி வர்த்தகமாகிறது.
கடந்த ஆண்டில்,
பிரதமரின் காப்பீடு திட்டங்களால் 44 கோடிபேர் பயனடைந்துள்ளனர்.
தனிநபர் வருமானம் 9 வருடங்களில் இரட்டிப்பாகி ரூ. 1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.
பிரதமரின் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளது.
44.6 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 11.75 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன
44.6 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM