பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்து வருகிறார். இந்த மத்திய பட்ஜெட் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். ஆகையால், இந்த பட்ஜெட் குறித்து பொது மக்களுக்கும் அனைத்து துறைகளுக்கும் மிக அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட் காகிதமில்லா வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் 2023 உரையை சமர்ப்பிக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல பெரிய அறிவிப்புகளை இதுவரை செய்துள்ளார். மேலும் கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) செயல்முறை விரைவில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எளிமைப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார். டிஜிட்டல் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய KYC அமைப்பை முழுமையாகக் கொண்டிருப்பதற்கு நிதி கட்டுப்பாட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
KYC செயல்முறை எளிமையாக்கப்படுவதால், பல தேவையற்ற செயல்முறைகள் நீக்கப்படும். வணிகம் செய்யும் முறைகளை எளிதாக்க பான் அட்டை பொது அடையாளங்காட்டியாக பயன்படும்.
இது குறித்து அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், KYC செயல்முறை எளிமைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான அடையாளங்காட்டியாக PAN பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.