நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வருங்கால கணவர் குறித்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். கேரள சினிமா குடும்பத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ், மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன், தொடரி, பைரவா, ரெமோ, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார், பெங்குயின், அண்ணாத்த, சாணி காயிதம், உள்ளிட்ட பல
படங்களில் நடித்துள்ளார்.
Khushbu: அழகு… அழகு… வெட்கப்பட்டு சிரிக்கும் குஷ்பு… லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
முன்னணி நடிகர்களுடன்…தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றமு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது மாமன்னன், சைரேன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். மேலும் தெலுங்கில் போலா ஷங்கர் மற்றும் தசரா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் தசரா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. Poorna Baby Shower: நடிகை பூர்ணா கர்ப்பம்… கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு!
காலை மிதித்த கீர்த்தி சுரேஷ்இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில நாட்களாக செய்திகளில் அடிபட்டு வருகிறார். அதவாது நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் விஜய்யின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாகவும் வதந்திகள் பரவின. அதற்கு ஏற்றது போலவே தரையில் அமர்ந்திருக்கும் விஜய்யின் காலை சோஃபாவில் அமர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் மிதிப்பது போன்ற போட்டோ வெளியானது. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாய்க்கு வந்தப்படி பேசி வந்தனர். Dancer Ramesh Death: அந்த ஒரு மணிநேரம் எங்க போன? இன்பவள்ளிக்கு டான்ஸர் ரமேஷின் மனைவி சித்ரா கிடுக்கிப்பிடி!
13 ஆண்டு காதல்மேலும் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு நீதி வேண்டும் என்றும் ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு வந்தனர். அதோடு விஜய் – கீர்த்தி சுரேஷை ஒப்பிட்டு தரக்குறைவான மீம்ஸ்களையும் வெளியிட்டனர் நெட்டிசன்கள். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் கடந்த 13 ஆண்டுகளாக தனது பள்ளி நண்பரை காதலித்து வருவதாகவும் இன்னும் 4 வருடங்கள் கழித்து அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவியது. கீர்த்தி சுரேஷின் காதலர் நடிகர் விஜய்க்கும் அறிமுகமானவர் என தகவல் வெளியானது. இதனால் இந்த விவகாரம் சற்று ஓய்ந்தது.
Vanitha: ஆம்பளைக்கு பொம்பள வேஷம் போட்டது மாதிரி இருக்கு… வனிதாவின் போட்டோவை பார்த்து பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
அவரை போன்ற கணவர்…இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷிடம் உங்களின் வருங்கால கணவர் யாரைப் போல் இருக்க வேண்டும் என அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட 8 நடிகர்களின் போட்டோக்கள் காண்பிக்கப்படுகிறது. இதனை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ், தனது வருங்கால கணவர் தளபதி விஜய் போல் இருக்க வேண்டும் என கூறுகிறார்.
Naresh Babu: கொன்னுடுவேன்னு மிரட்டுறா.. 4வது திருமணம் செய்யும் நடிகர் 3வது மனைவி மீது பரபர புகார்!
விஜய்யுடன் நட்புஇந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதனால்தான் கீர்த்தி சுரேஷை கலாய்த்து வருகிறார்களா என கேட்டு வருகின்றனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை ஆவார். அதோடு விஜய்யுடன் நல்ல நட்பையும் கொண்டுள்ளார். தனது காதலரையும் நடிகர் விஜய்க்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதாவின் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம்?
பாத்தீங்களா…
Keerthy Suresh