புதுடில்லி: உள்ளூர்களை இணைப்பதற்காக நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிபேட்கள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
*ஜாயின்ட் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ.15 லட்சம் வரை பரிமாற்றம்
*லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்காகன இறக்குமதி வரி விலக்கு தொடரும்
*சிறுவர்கள் பெரியோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்
*மருந்து துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டம்
*இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம்
*ஐசிஎம்ஆர் ஆய்வு நிறுவனங்களை மக்கள் அதிகளவு பயன்படுத்த நடவடிக்கை
*கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்கு பதில் 100 சதவீதம் இயந்திரம் பயன்படுத்தப்படும்
*உள்நாட்டு பயணத்திற்காக 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள்
*உணவு பாதுகாப்பு, விவசாயிகள் பாதுகாப்பு குறித்து இந்தியா கவனம் செலுத்துகிறது
*திறன் ஏற்றுமதியில் மிகப்பெரிய மற்றும் 2வது மிகப்பெரிய ஏற்றுமதியாளர் இந்தியா
*ரசாயன உர பயன்பாட்டை குறைக்க கோவர்த்தன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
*5ஜி மொபைல் செயலியை உருவாக்க 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்
*ஏகலைவா பள்ளிகளில் 38 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
*சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் ரூ.63 கோடி கடன் வழங்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement