தன்னைக் கொன்றது யார் என தன் கணவன் ஆவியாக வந்து தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார் ஒரு பிரித்தானியப் பெண்.
நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்
பிரித்தானியாவில் தன் மனைவியான கொலீனுடன் (Coleen Campbell) வாழ்ந்துவந்த தாமஸ் (Thomas Campbell), இரண்டு மணி நேரம் சித்திரவதை செய்யப்பட்டுக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அவரது கொலைக்கு அவரது மனைவியான கொலீனும் உடந்தை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது மாமியாரான Lynnஐ சந்தித்த கொலீன், தான் ஆவிகளுடன் பேசும் ஒருவர் மூலமாக தனது கணவரான தாமஸை சந்தித்ததாகவும், தன்னை சித்திரவதை செய்து கொன்றவர்கள் இவர்கள்தான் என அவர் தன்னிடம் கூறியதாகவும், Lynn நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Image: STEVE ALLEN
முரண்பாடான கருத்துக்கள்
ஊடகம் ஒன்றில், செல்வச் செழிப்புடன் ஆடம்பரமாக தன் மனைவியுடன் வாழ்ந்துவந்த தாமஸைக் குறித்த கட்டுரை ஒன்று வெளியானதைத் தொடர்ந்து, அவரைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு பெண் அல்லது சில பெண்கள் தொடர்பிலான போட்டியில் ஏற்பட்ட உருவான சண்டையில் தான் கொல்லப்பட்டதாக தாமஸ் கூறியதாக அவரது மனைவியான கொலீன் தெரிவித்துள்ளார்.
Image: MEN Media
தாமஸ் கொலையில் மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், தன்னைக் கொன்றது மூன்று பேர் அல்ல, இரண்டு பேர் என்றும், அவர்கள் இன்னமும் நாட்டில்தான் இருக்கிறார்கள் என்றும் தாமஸ் கூறியதாகவும் கொலீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இளம் வயதில் கொல்லப்பட்டதற்காக தான் கவலைப்படவில்லை என்று கூறிய தாமஸ், தான் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துமுடித்துவிட்டதாக தன்னிடம் கூறியதாகவும் கொலீன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்கள் அனைத்தையும், தாமஸின் தாயாகிய Lynn நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Image: STEVE ALLEN
Image: MEN Media