Budget 2023: இணையத்தில் வைரலாகும் 30 ஆண்டு பழமையான வரி அடுக்கு

பட்ஜெட்டில் வருமான வரி அடுக்குகள்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மோடி அரசின் சார்பில் தாக்கல் செய்தார். இதில் புதிய அறிவிப்பை வெளியிட்டது, மேலும் வருமான வரி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பின் கீழ், 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் மீதான தள்ளுபடி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வருமானம் வரை இருக்கும் நபர் இனி வரி கட்ட தேவையில்லை. இதற்கிடையில், தற்போது 1992 ஆம் ஆண்டின் வருமான வரி அடுக்கு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதன் விவரத்தை இங்கே காண்போம்.

1992 பட்ஜெட்டில் புதிய வரி அடுக்குகள்
உண்மையில், இந்த வைரல் புகைப்படம் ட்விட்டரில் இந்தியன் ஹிஸ்டரி பிக் என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 1992 பட்ஜெட்டில் புதிய வருமான வரி ஸ்லாப் என்று தலைப்பு பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி அதில், ஆண்டிற்கு 28000 ஆயிரம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை. 28000 ஆயிரம் ரூபாய்க்கு வரி கிடையாது. 28001 ஆயிரம் முதல் 50000 ரூபாய் வரை வருமானமும் இருப்பவர்களுக்கு 20 சதவீத வரி. ரூ.50001 முதல் 100000 வரை இருப்பவர்களுக்கு 30 சதவீத வரியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவர்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட அடுக்கு
1992-ம் ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் அரசில் இருந்த நிதியமைச்சர் மன்மோகன் சிங் வரி விதிப்புகளை மூன்றாகப் பிரித்த காலத்தின் படம் இது. இந்த புகைப்படம் வைரலாக பரவியவுடன், மக்கள் அதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கினர். அதன்படி பலரும் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டுடன் ஒப்பிட ஆரம்பித்தனர்.

2023 இன் புதிய வருமான வரி வரம்பு 
7லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை
3 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு எந்த வரியும் இல்லை
12-15 லட்சம் வரை வருமானமும் இருப்பவர்களுக்கு 15%வரி
7-9லட்சம் வரை இருப்பவர்களுக்கு 5% வரி
15லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் 30% வரி

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.