நல்லா இருந்த இடுப்புக்கு ‘இடுப்பு மாற்று சிகிச்சை’… அப்போலோ மீது குற்றம் சாட்டும் தஸ்லிமா நஸரீன்!

பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸரீன், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் யத்தின் கர்பண்டா தனக்கு தவறாக சிகிச்சை அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ட்வீட் செய்து குற்றசாட்டுக்களை அடுக்கியுள்ளார் தஸ்லிமா நஸரீன். ஜனவரி 11 அன்று முழங்கால் வலியுடன், தஸ்லிமா நஸரீன்  அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அங்கு டாக்டர் யதின் கர்பண்டா அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சையளிக்க இடுப்பு மாற்று சிகிச்சை தேவைப்படும் என்றும் கூறினார்.

ஜனவரி 13 அன்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிடி ஸ்கேன் அல்லது எக்ஸ்ரேயில் இடுப்பு எலும்பு முறிவு குறித்த எந்த தகவலையும் பார்க்கவில்லை என்று தஸ்லிமா நஸரீன் குற்றம் சாட்டியுள்ளார். இருந்தபோதிலும், மருத்துவர்கள் அவரது இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.  தனக்கு இடுப்பு எலும்பு முறிவு எதுவும் இல்லை, என கூறும் தஸ்லிமா நஸரீன் கூற்றுப்படி,   கேஸை முடித்து வைக்கும் வகையில், மருத்துவமனை தவறான டிஸ்சார்ஜ்  அறிவிப்பை தயாரித்துள்ளது என்றார். அவர் ஓய்வு மற்றும் வலி நிவாரணிகளாலேயே குணப்படுத்தியிருக்க முடியும் என்றும், ஆனால் மருத்துவமனை அத்தகைய ஆலோசனையை வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார். “இடுப்பு மாற்று சிகிச்சையின் சிக்கல்களால் நான் இறந்தால், டாக்டர் கர்பண்டாவைத் தவிர வேறு யாரும் பொறுப்பல்ல என அவர் கூறியுள்ளார். முழங்கால் வலியுடன் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, “சில மணிநேரங்களில் அவர் எனக்கு THR அறுவை சிகிச்சையை செய்தார். அது இன்னும் ஒரு கனவாகவே எனக்கு தோன்றுகிறது. அவர் Xray & CT கண்டுபிடிப்புகள் பற்றி என்னிடம் பொய் சொன்னார்” என பகீர் குற்றசாட்டுக்களை வைத்துள்ளார்.

 

 

 மருத்துவமனைக்கு 7,42,000 பில் செலுத்தியுள்ள தஸ்லிமா நஸரீன்  தனது தொடர்ச்சியான ட்வீட்களில், தனக்கு சிந்திக்க கூட நேரம் கொடுக்கவில்லை என்றும் வேறு ஒரு மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை ஏதும் பெற முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அப்பல்லோ மருத்துவமனை மறுத்துள்ளது. தஸ்லிமா நஸரீன் மயங்கி விழுந்ததாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னால் நடக்கக்கூட முடியாத நிலையில், மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவரது வயதைக் கருத்தில் கொண்டு, இடுப்பு மாற்று சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சையாகும் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து பிசியோதெரபி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டாலும், அவர் மருத்துவமனைக்கு திரும்பி வரவில்லை எனவும் அபோலோ கூறியுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் 30 வருட அனுபவம் உள்ளவர் என்றும், சிறந்த மூத்த மருத்துவர் என்றும் அப்போலோ மருத்துவமனை தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த சம்பவம் விசாரணைக்குரிய சம்பவமாகவே உள்ளது. ஆனால் தஸ்லிமா நஸரீனின் வழக்கு ட்விட்டரில் பரப்ரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளின் சூறையாடலைப் பற்றி பலர் வெளிப்படையாக எழுதுகிறார்கள். தனியார் மருத்துவமனைகள் எப்படித் தேவையில்லாத அறுவை சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் செய்துகொண்டே இருக்கின்றன. இந்தத் தொடர் கொள்ளையில் நோயாளிகள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து பல விதமான கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன. தஸ்லிமா நஸரீனின் புகாருக்குப் பிறகு இதுபோன்ற ஆயிரக்கணக்கான ட்வீட்டுகள் ட்விட்டரில் பதிவாகத் தொடங்கின.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.