Vijay, Lokesh Kanagaraj: தளபதி 67 படம் தொடர்பாக வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.
தளபதி 67லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தளபதி 67 படம் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. விஜய் நடித்து வரும் அந்த படம் தொடர்பாக தினமும் அப்டேட் வெளியாகி வருகிறது. தளபதி 67 என் படம் என்றார் லோகேஷ். அதனால் இது லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸ்(LCU) கதையாக இருக்கும் என்று கூறப்பட்டது. அப்படி என்றால் எல்.சி.யூவில் இருக்கும் கமல் ஹாசன், ஃபஹத் ஃபாசில் எல்லாம் தளபதி 67 படத்தில் வருவார்களே என்றார்கள் சினிமா ரசிகர்கள்.
விஜய்தளபதி 67 படம் எல்.சி.யூ கதை கொண்டது என்றால் விஜய்க்கு தான் ஆபத்து. நடிப்பு ராட்சசன்கள் எல்லாம் லைன் கட்டி வந்து நடிப்பார்கள். அந்த கூட்டத்தில் விஜய் காணாமல் போய்விடுவார் என சினிமா ரசிகர்கள் கிண்டல் செய்யத் துவங்கினார்கள். இது தொடர்பாக சினிமா ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் அந்த தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.Trisha, Thalapathy 67: 14 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் சேர்ந்த த்ரிஷா: க்யூட் வீடியோ
உத்தரவுதளபதி 67 படம் உன்னுடைய எல்.சி.யூ. கதையாக இருக்கக் கூடாது. அந்த யூனிவர்ஸில் இருந்து யாரும் இங்கு வரக் கூடாது. என்னை வைத்து தனி யூனிவர்ஸை உருவாக்குடா தம்பி. இதை எந்த யூனிவர்ஸிலும் கோர்க்கக் கூடாது என்று லோகேஷ் கனகராஜுக்கு உத்தரவிட்டுள்ளார் விஜய் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால் தளபதி 67 படத்தில் லோகேஷின் யூனிவர்ஸில் இருக்கும் ஆட்களை பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.
ரசிகர்கள்தளபதி 67 படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மிஷ்கின், கவுதம் மேனன் என ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் எல்.சி.யூ. ஆட்கள் வேறு வந்தால் கூட்டம் அதிகமாகிவிடும் என்பது தான் விஜய் ரசிகர்களின் பயமாக இருந்தது. ஆனால் தற்போது பயப்படத் தேவையில்லை என்பதை அறிந்த அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.
காஷ்மீர்தளபதி 67 படக்குழு காஷ்மீருக்கு கிளம்பிச் சென்றிருக்கிறது. அங்கு சில காட்சிகளை படமாக்கி முடித்த பிறகு வெளிநாட்டிற்கு செல்கிறார்களாம். தளபதி 67 படத்தின் முக்கிய வில்லனே சீயான் விக்ரம் என்று கூறப்படுகிறது. மேலும் சிம்புவும் வில்லத்தனம் செய்யப் போகிறாராம். இது குறித்த அறிவிப்பை தான் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே தளபதி 67 படத்தின் ப்ரொமோ வீடியோ பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Thalapathy 67, Vijay: கெளம்பிட்டாருய்யா விஜய்ணா கெளம்பிட்டாருய்யா: வீடியோ பார்த்தீங்களா?