திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியை சேர்ந்தவர் அனிஸ். இவர் மனைவி மலர்விழி அந்த பகுதியிலுள்ள கொடைக்கானல் இங்கிலீஸ் கிளப்பில் சமையல் பிரிவில் பணி புரிந்து வருகிறார்.
இவர் அங்கு, சமைக்கப்படும் மீதி உணவினை அடிக்கடி வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். இதை அங்குள்ள பாதுகாவலர்கள் கண்டறிந்து அவரை, சமையல் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு வேறு பணிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மலர்விழி தன்னை மற்றொரு பிரிவிற்கு மாற்ற காரணமாக இருந்த பணியாளர்களை பழிவாங்க திட்டம் தீட்டினார். அந்த திட்டத்தின் படி, கிளப்பில் பணிபுரியும் பணியாளர்கள் மதிய உணவு அருந்த சென்றபோது மலர்விழி தான் மறைத்து வைத்திருந்த உயிர்பறிக்கும் வின்டர்கிரின் தைலத்தை அவர்களின் உணவில் கலந்துள்ளார்.
இந்த உணவை சாப்பிட்ட பணியாளர்கள் தங்களது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்து, பின்னர் சாப்பிடுவதையும் நிறுத்தியுள்ளனர். இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையடுத்து குணமடைந்தது வீடு திரும்பினார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பணியாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் வழக்குபதிவு செய்து கிளப்பில் உள்ள உணவில் மலர்விழி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், மலர்விழி தைலத்தை உணவில் கலந்தது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் படி, போலீசார் மலர்விழியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.