வருடாந்தோறும் பொங்கல் பரிசு தமிழக அரசால் வழங்கப்படும். இந்த ஆண்டும் மக்களுக்கு தமிழக முதலமைச்சர் பொங்கல் பரிசு திட்டத்தை அறிவித்தார்.
குடும்ப அட்டை கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 ரொக்கத் தொகையுடன் வேஷ்டி, சேலை, அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. சுமார் 2,430 கோடி செலவில் 2 கோடியே 18 லட்சத்து 86,12 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதற்காக ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி தொடங்கிவைத்தார்.
ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 13 வரை மாவட்டங்கள் தோறும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது.
பொங்கல் திருவிழா முடிந்து 10 நாள்கள் கடந்த பின்னர், தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 39,669 குடும்ப அட்டைதாரர்கள் ரூபாய் 1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென் சென்னையில் 49,538 குடும்ப அட்டைதாரர்களும், வட சென்னையில் 35,723 குடும்ப அட்டைதாரர்களும், காஞ்சிபுரத்தில் 8,026, செங்கல்பட்டில் 10,263, திருவள்ளூரில் 8,874 குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கவில்லை. கூட்டுறவுத்துறையினர் அரசு கருவூலத்தில் மீதித்தொகை ரூபாய் 43,96,69,000 -ஐ செலுத்தியுள்ளனர்.