டெல்லி ஏர்ப்போர்ட்.. Code word-ல் போஸ்ட்.. T67-ல் நடிக்கிறாரா அமலா ஷாஜி? விவரம் இதோ!

விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிப்பவர்களின் பட்டியலை தயாரிப்பு நிர்வாகம் நேற்று (ஜன.,31) முதல் அறிவித்து வருகிறது. அதன்படி, ப்ரியா ஆனந்த், சஞ்ஜய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், மிஷ்கின் ஆகியோரது பட்டியலை வெளியிட்டது செவன் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

அதற்கடுத்தபடியாக இன்று தளபதி 67-ல் த்ரிஷா இணைந்துள்ளார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி ஆகிய படங்களுக்கு பிறகு ஐந்தாவது முறையாக விஜய்யுடன் சேர்ந்து நடிக்கப் போகிறார் த்ரிஷா.

Image

இதனையடுத்து #Thalapathy67Cast என்ற ஹேஷ்டேக்கும், #Thalapathy67 என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படு வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை வெளியான நட்சத்திரங்களின் பட்டியலை வைத்தும், தளபதி 67 முழுக்க முழுக்க 100 % என் படமாக மட்டுமே இருக்கும் என லோகேஷ் கூறியதை வைத்தும் விஜய்யின் அடுத்த கெரியர் பெஸ்ட் படமாக இது இருக்கப் போகிறது என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.

இதனிடையே பிப்ரவரி 3ம் தேதி வரை தளபதி 67 குறித்த அப்டேட்கள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் நடிகர் நடிகைகளை விடவே கோடிக்கணக்கான ஃபாலோயர்ஸ்களை கொண்டிருக்கும் இன்ஃப்ளூயன்சரான அமலா ஷாஜி டெல்லி விமான நிலையத்தில் லக்கேஜ் உடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, “அது நடக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனைக் கண்ட அவரது ஃபாலோயர்ஸ்கள் பலரும் தளபதி 67 ஆக இருக்குமோ? தளபதி 67-ல் இவரும் நடிக்க இருக்கிறாரோ? என்றெல்லாம் கமென்ட்ஸ்கள் பறந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக “T67 ah irukkumo” என்ற கமென்ட்டை முதலில் Pinned Comment ஆக வைத்திருந்த அமலா ஷாஜி பிறகு அதனை Unpin செய்திருக்கிறார். இந்த பதிவு தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Amala Shaji (@_amalashaji_)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.