தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரோச்பூங்கா பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் படி, தென்பாகம் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரோச்பூங்கா பகுதியில் மூன்று வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அதன் படி அங்கு சென்ற போலீசாரை பார்த்த வாலிபர்கள் தப்பி ஓடினர். அவர்களை பிடிப்பதற்காக போலீசார்கள் விரட்டி சென்றனர்.
அதில் ஒரு வாலிபர் கத்தியை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் போலீசார் அவர்களை பிடித்தனர். அதன் பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த லிவிங்ஸ்டன், ஸ்டாலின் மற்றும் உதயமூர்த்தி என்பது தெரியவந்தது.
இவர்களில் போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டியது லிவிங்ஸ்டன் என்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் போலீசார் மூன்று நபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் ரூ. 19 ஆயிரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் தருவைகுளம், தென்பாகம், வடபாகம் மற்றும் தெர்மல்நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.