வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைக்கும் வகையிலும், அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து உரையாற்றிய அவர், விவசாயிகள், தொழிற்துறையினர், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவருக்கும் பலன் தரும் வகையிலும், வேளாண்துறையில் டிஜிட்டல் நுட்பங்களை பயன்படுத்தவும் பட்ஜெட் வழிவகை செய்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.