Poorna Baby Shower: நடிகை பூர்ணா கர்ப்பம்… கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு!

நடிகை பூர்ணாவின் வளைக்காப்பு கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

நடிகை பூர்ணாகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தையில் பகுதியை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. ஷாம்னா காஸிம் என்ற தனது பெயரை சினிமாவுக்காக பூர்ணா என மாற்றிக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான பூர்ணா, தொடர்ந்து பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்தார் பூர்ணா.​ Vanitha: ஆம்பளைக்கு பொம்பள வேஷம் போட்டது மாதிரி இருக்கு… வனிதாவின் போட்டோவை பார்த்து பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!​
தமிழ் சினிமாவில்…தொடர்ந்து தமிழ் சினிமாவில் கொடைக்கானல், கந்தக் கோட்டை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடி வீரன், அடங்கமறு, காப்பான், தலைவி, விசித்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் படம் பேசும், அம்மாயி, உள்ளிட்ட ப டங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார் பூர்ணா. ​ Pooja Hegde: ப்பா… கண்ணு பட்டுடும்… என்னா அழகு… பட்டு புடவையில் சொக்க வைக்கும் விஜய் ஹீரோயின்!​
தொழில் அதிபருடன் திருமணம்இந்நிலையில் நடிகை பூர்ணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவ ரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் துபாயில் விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் நடிகை பூர்ணா. இதனைக் கேட்ட ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் நடிகை பூர்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
​ Naresh Babu: கொன்னுடுவேன்னு மிரட்டுறா.. 4வது திருமணம் செய்யும் நடிகர் 3வது மனைவி மீது பரபர புகார்!​
பூர்ணா வளைகாப்புஇந்நிலையில் நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பூர்ணாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர். நடிகை பூர்ணாவின் வளைகாப்பு போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் மெரூன் நிற நிற பட்டு சேலையில் கை நிறைய வளையல், கழுத்து நிறைய நெக்லஸ் என தாய்மையின் பூரிப்பில் உள்ளார் பூர்ணா.
​ வனிதாவின் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம்?​
வாழ்க்கையின் சிறந்த தருணங்கள்நடிகை பூர்ணா தனது வளைகாப்பு போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் வயிற்றில் குழந்தையுடன் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள பூர்ணா, வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் என்றும் என் மீதும் என் குழந்தையின் மீதும் நீங்கள் பொழிந்த அன்புக்கும் ஆசிர்வாதத்துக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். பூர்ணாவின் வளைக்காப்பு போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. திருமணத்திற்கு பிறகு கணவருடன் துபாயில் செட்டில் ஆகி உள்ள நடிகை பூர்ணா புதிதாக எந்த படத்திலம் கமிட் ஆகவில்லை என கூறப்படுகிறது.
​ Dancer Ramesh Death: தாங்க முடியலம்மா… உருட்டுக்கட்டையால் அடித்த இன்பவள்ளி.. கதறும் டான்ஸர் ரமேஷ்.. ஷாக்கிங் வீடியோ!​
பூர்ணா போஸ்ட் View this post on Instagram A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)
Poorna Baby Shower

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.