நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு விலை அதிகம் மற்றும் குறைவு எனப் பார்ப்போம்.
2023 – 24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டு இப்பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு விலை அதிகம் மற்றும் குறைவு எனப் பார்ப்போம்.
அதன்படி, தொலைக்காட்சி, செல்போன் ஆகிய பொருட்களை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாகவும், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றிற்கான இறக்குமதி வரியை உயர்த்தப்படுவதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சில துறைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரி 23 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
விலை அதிகரிப்பு பொருட்கள்:
தங்கம், வைரம், செம்பு உள்ளிட்டவற்றின் சுங்க வரி அதிகரிப்பு.
ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான சுங்க வரி அதிகரிப்பு.
பிளாட்டினத்தால் செய்யப்பட்ட பொருட்களுக்கும் சுங்க வரி அதிகரிப்பு.
சிகரெட் மீதான சுங்க வரி 16 சதவிகிதம் அதிகரிப்பு.
மின்சார சமையலறை புகைபோக்கிக்கான சுங்கவரி 7.5% இல் இருந்து 15% ஆக அதிகரிப்பு.
பொம்மை, மிதிவண்டி, கார் மற்றும் பைக் உள்ளிட்ட பொருட்களின் சுங்க வரியும் அதிகரிப்பு.
விலை குறைவு பொருட்கள்:
மின்சார வாகன பேட்டரிகளுக்கான வரி குறைப்பு.
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இறால் தீவனத்தின் மீதான சுங்க வரி குறைப்பு.
மொபைல் போன், கேமரா, டிவி உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி 2.5 சதவீதமாக குறைப்பு.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM