தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் செய்யும் வசூல் சாதனைகளை பற்றி அனைவருக்குமே தெரியும். என்னதான் இவரின் படங்களின் விமர்சனங்கள் முன்ன பின்ன இருந்தாலும் ரசிகர்களின் பேராதரவினால் வசூல் ரீதியாக விஜய்யின் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெரும்.
அதற்கு எடுத்துக்காட்டாக விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான இரு படங்களை சொல்லலாம். பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரிதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களாக தயாரிப்பாளர்களுக்கு அமைந்தன.
Thalapathy 67: தளபதி 67 டைட்டிலை லாக் செய்த லோகேஷ்..இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!
இதன் காரணமாகவே விஜய்யின் படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் தவம் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் இந்த உயரத்தை அடைந்ததற்கு மிக முக்கியமான காரணம் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ் .ஏ.சந்திரசேகர் தான் என சொன்னால் அது மிகையாகாது.
விஜய்யை ரசிகர்களின் மனதில் ஒரு ஹீரோவாக தன் கடுமையான முயற்சியினால் நிலைநிறுத்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர். மேலும் விஜய்யின் திரைப்பயணத்தில் பக்கபலமாக இருந்த இவருக்கும் விஜய்க்கும் தற்போது மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் தன் திரைப்பயணத்தை பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் பொதுவாக சமூகம் சார்ந்த புரட்சிகரமான படங்களை தான் எடுப்பேன். ஆனால் விஜய்யை ஒரு கதாநாயகனாக ரசிகர்களின் மனதில் இடம்பெற செய்யவே காதல் படங்களை இயக்க துவங்கினேன்.
விஜய் அப்போது இளைஞன் என்பதால் காதல் படங்கள் தான் செட் ஆகும் என்பதற்காக காதல் படங்களாக எடுத்தேன். எனவே தற்போது தான் நான் மீண்டும் என் பாணியில் படங்களை இயக்க துவங்கியுள்ளேன். தற்போது இயக்கியிருக்கும் நான் கடவுள் இல்லை திரைப்படம் முழுக்க முழுக்க என் பாணியில் உருவான திரைப்படம் என கூறியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.