சென்னை அருகே புழல் பகுதியில் குமரன் தெருவில் சுதா சந்தர் என்ற 22 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மரித்து சரமாரியாக வெட்டி அதே இடத்தில் கொலை செய்தனர். இது குறித்து, கொளத்தூர் காவல்துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கடந்த சுதா சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், இது பற்றி வழக்கு பதிவு செய்த அவர்கள் அவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் அவர் பெயர் ராகவி என்றும் ஆவடி மோரை பகுதியில் வசித்து வந்தபோது சுதா சந்திரன் ராகவியும் காதலித்ததும் தெரிய வந்துள்ளது. இந்த காதலை அறிந்த பெற்றோர் அவர்கள் இருவரையும் பிரித்து வசந்த் என்ற ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இவர்களுக்கு இரண்டு மாத பெண் குழந்தை இருக்கிறது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ராகவி பிரிந்து சென்று தனது முன்னாள் காதலருடன் வாழ முடிவு செய்துள்ளார். அதன்படி, ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் ஆத்திரத்தில் இருந்த கணவர் வசந்த் சுதா சந்தரை கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் அத்துடன் வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.