சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் அறிவித்துள்ளதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பழனிசாமி தரப்பில் காலையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், பன்னீர் தரப்பும் வேட்பாளரை அறிவித்துள்ளது. பழனிசாமி, பன்னீர் வேட்பாளர்களில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.