டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்தா?


டார்க் சாக்லேட்ஸை ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருதுகிறோம். அதனால் தான் இவற்றை தயக்கமின்றி பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

உண்மையில் டார்க் சாக்லேட்டுகள் ஆரோக்கியமானதா? இல்லையா என்ற சந்தேகம் பலரிடையே காணப்படும்.

டார்க் சாக்லேட் உண்மையில் அதிகமாக எடுத்து கொள்வது தீங்கு விளைவிக்க கூடியவை .

தற்போது அவை குறித்து முழுமையாக தெரிந்து கொள்வோம்.

டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்தா? | Is Eating Dark Chocolate Dangerous For The Body

ஏன் சாப்பிட கூடாது?

  •  சில டார்க் சாக்லேட்ஸ்களில் ஈயம் மற்றும் காட்மியம் ஆகிய இரண்டு ஹெவி மெட்டல்ஸ் இருக்கின்றன. இவை இரண்டுமே பல உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. 
  •  பல டார்க் சாக்லேட் மாதிரிகளில் காட்மியம் மற்றும் ஈயம் ஆகிய 2 கனரக உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றது. 
  •   இதனை அதிகமாக உட்கொள்வதனால் உடல் நலத்திற்கே போதும்.   

 யார் எடுத்து கொள்ள கூடாது?

  • மற்றவர்களை விட கர்ப்பிணி பெண்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் அதிக டார்க் சாக்லேட்ஸ்களின் நுகர்வால் ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது.  ஏனெனில் மெட்டல்ஸ் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தலாம், மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம் மற்றும் குறைந்த IQ-விற்க்கு வழிவகுக்கும்.  
  • பெரியவர்கள் அதிகம் ஈயம் அடங்கிய பொருளை அடிக்கடி நுகர்வது நரம்பு மண்டல பிரச்சனைகள், உயர் ரத்த அழுத்தம், நோயெதிர்ப்பு அமைப்பு குறைபாடு, சிறுநீரக பாதிப்பு மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

  அபாயத்தை எவ்வாறு குறைக்கலாம் ? 

  •   குறைந்த ஈயம்/காட்மியம் கன்டென்ட் கொண்ட டார்க் சாக்லேட்ஸ்களை உட்கொள்ளலாம். 
  •   இல்லை என்றால் எப்போதாவது டார்க் சாக்லேட்ஸ்களை எடுத்து கொள்ளலாம்.
  • குறைந்த கோகோ உள்ளடக்கம் கொண்ட சாக்லேட்ஸ்களை உட்கொள்வது இன்னும் சிறந்தது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.