சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘சூர்யா 42’ . வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற பேமிலி சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட கமர்சியல் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது. மேலும், ‘சூர்யா 42’ படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் ‘சூர்யா 42’ படம் 3டியில் உருவாகி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளார். மேலும் சுமார் 10 மொழிகளில் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘சூர்யா 42’ படப்பிடிப்பில் இருக்கும் போதே, தயாரிப்பாளர் டாக்டர் ஜெயந்திலால் கடா இந்தப்படத்தின் இந்தி உரிமையை ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தி உரிமையைத் தவிர, படத்தின் இந்தி சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் தியேட்டர் விநியோக உரிமைகளையும் வாங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடியும் முன்பே 100 கோடி வரை ‘சூர்யா 42’ குவித்துள்ளது.
Indian 2: ‘இந்தியன் 2’ படத்திற்காக ஆண்டவர் செய்யும் காரியம்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
இந்நிலையில் இப்படத்தில் ‘சீதா ராமம்’ படம் மூலம் கவனம் ஈர்த்த மிருணால் தாகூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. பீரியட் பிலிமாக உருவாகவுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மிருணாள் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வந்தது.
Thalapathy 67: என்ன நண்பா, நண்பி ஹாப்பியா.?: இணையத்தை தெறிக்கவிடும் ‘தளபதி 67’ படக்குழு.!
இதுக்குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்துள்ள விளக்கத்தில் ’சூர்யா 42’ படத்தில் மிருணாள் தாகூர் நடிப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் முற்றிலும் வதந்தி. அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் ’சூர்யா 42’ படத்தில் மிருணாள் தாகூர் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.