
வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கக்கடத்தல் தொடர்பாக சென்னை பன்னாட்டு விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
அப்போது துபாயில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த பயணியின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.25,43,000 மதிப்புள்ள 510 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

சிங்கப்பூரில் இருந்து வந்த பெண்ணின் கைப்பையில் இருந்த ரூ.27,43,000 மதிப்புள்ள 550 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து வந்த இளைஞர் ஷுவில் மறைத்து தங்கத்தை கடந்து வந்தார்.
அவரிடம் இருந்து ரூ. 24,13,000 மதிப்புள்ள 484 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். கொழும்பில் இருந்து வந்த இளைஞர் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ. 31,16,000 மதிப்புள்ள 625 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
எனவே, பெண் உள்பட 4 பேரிடம் இருந்து ரூ. 1.08 கோடி மதிப்பிலான 2.169 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in