ரத்த தான முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கும் ரத்த தானம் செய்பவர்களுக்கும் அரசு சார்பில் சான்றிதழ்களும் சில உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அவசர தேவைக்கு ரத்தம் கொடுப்பவர்களை கடவுளுக்கு சமமாக தான் அனைவரும் பார்க்கின்றனர்.
சில அரிய வகை ரத்த ரத்தங்கள் கிடைக்காமல் போகும்போது கூட எப்படியாவது தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெகு விரைவில் தகுதியான நபர்களிடமிருந்து ரத்தம் கிடைத்து வருகிறது.
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நபர்களுக்கு ரத்த தேவை ஏற்பட்டால் அவசரத்திற்காக தனது ரத்தத்தை கொடுக்க முன் வருபவர் தான் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் மணிகண்டன். அவசர தேவையாக யாராவது தொடர்பு கொண்டால் விரைந்து சென்று ரத்தம் கொடுக்கும் மணிகண்டன் இதுவரை 28 நபர்களின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் மணிகண்டனை சந்தித்த காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மணிகண்டனை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். இது மற்றவர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.