நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கான மூலதன செலவீனங்கள் 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இத்தொகை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக உள்ளது. மூலதன முதலீடு செலவு மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாக உயர்த்தப்படுகிறது.
”இது, 2019 – 20ல் உயர்த்தப்பட்டதை விட, மூன்று மடங்கு அதிகம்,” என, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கான மூலதனங்களை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புக்கான நிதி செயலகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஈர்க்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement