தருமபுரியில், கூலித்தொழிலாளி ஒருவர் பழைய தமிழ் எழுத்துக்களை கொண்டு 1330 திருக்குறளையும் ஐஸ்குச்சிகளில் எழுதியுள்ளார்.
நல்லம்பள்ளி அருகே எள்ளுக்குழியைச் சேர்ந்த வேல்முருகனுக்கு, இசை அமைப்பாளரும் நடிகருமான இவருக்கு, ஹிப் ஆப் ஆதி வெளியிட்ட இசை ஆல்பத்தை கேட்டு தமிழ் எழுத்துகள் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்து, ஐஸ்குச்சியின் ஒருபக்கம் பழைய தமிழ் எழுத்துக்களிலும், மற்றொரு பக்கத்தில் நடைமுறையில் இருக்கும் தமிழ் எழுத்துக்களிலும் திருக்குறளை ஒன்றரை வருடங்களில் எழுதி முடித்திருக்கிறார்.