கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இரண்டு குழந்தைகளின் தாயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கே.ஜி சாவடி பகுதியில் சேர்ந்த 28 வயதுடைய இளம் பெண்ணுக்கு திருமணமாகி கணவர், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இளம்பெண் வேலைக்குச் செல்லும் பொழுது வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதையடுத்து மனைவியின் கள்ளக்காதல் குறித்து கணவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று இளம் பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் காணாமல் போன மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கணவர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் எங்கும் அவர்கள் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் மற்றும் குழந்தைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.