கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கறுப்பு வரலாற்று மாதம் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டார்.
கறுப்பு வரலாற்று மாதம்
இந்த மாதம் கனடாவில் கறுப்பினத்தவர்களுக்காக கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கான சிறந்த வாழ்க்கை முறையை மேம்படுத்தித் தர உறுதி அளிப்பதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மேலும், கனடாவில் கறுப்பினத்தவர்களில் சாதனை படைத்தவர்களை குறிப்பிட்டு அவர் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார்.
பிரதமரின் அறிக்கை
ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையில், ‘கருப்பு வரலாற்று மாதத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும்போது கனடாவில் உள்ள கறுப்பின சமூகங்களின் வளமான வரலாற்றைப் பற்றி சிந்தித்து, அனைவருக்கும் சமமான எதிர்காலத்தை உருவாக்க உறுதியளிக்கிறோம்.
கனேடியர்கள் கறுப்பின சமூகங்களின் மரபுகளை கடற்கரையில் இருந்து கடற்கரை வரை கௌரவிப்பதற்கும், நாடு முழுவதும் அவர்கள் செய்த பங்களிப்புகளை கொண்டாடுவதற்கும் இது தான் நேரம்.
விஞ்ஞானிகள் முதல் கலைஞர்கள் வரை, வணிக உரிமையாளர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை என கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த கனேடியர்கள், ஒவ்வொரு நாளும் நம் நாட்டை வடிவமைத்து வருகின்றனர்.
முதல் கறுப்பின கனேடிய பெண்ணின் சாதனை
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, House of Commons-க்கு தெரிவு செய்யப்பட்ட முதல் கறுப்பின கனேடியப் பெண் என்ற வரலாற்றை ஜீன் அகஸ்தீன் படைத்தார்.
பின்னர் அவர், கூட்டாச்சி அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட முதல் கறுப்பின கனேடியப் பெண்மணி ஆனார்.
அவர் கனடா முழுவதிலும் உள்ள சமூகங்களுக்கும் மற்றவர்கள் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கும் சிறந்த ஒரு கலங்கரை விளக்கமாக தொடர்கிறார்.
ஜீன் அகஸ்தீன் முதல் மருத்துவர் June Marion James போன்ற மருத்துவ முன்னோடிகள் வரை, விளையாட்டு வீரர்கள் டொனோவன் பெய்லி போன்ற வெற்றிகரமான தொழில்முனைவோராகவும், விஞ்ஞானிகளாகவும், Boucar Diouf போன்ற நகைச்சுவை நடிகர்களாகவும், Dionne Brand போன்ற கலைஞர்களாகவும் மாறியுள்ளனர்.
எனவே இந்த ஆண்டின் கறுப்பு வரலாற்று மாதம், பிரபலங்களின் கதைகளை கூறத் தகுந்ததாக கொண்டாடப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.