ஜெயந்திலால் சலானி, தலைவர், சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கம்:
இது, சாமானிய மக்களுக்கு சிறந்த பட்ஜெட். அதே சமயம், தங்க நகை வியபாரிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் வரி குறைப்பு செய்யப்படாமல், 15 சதவீதம் வரி தொடர்கிறது.
வெள்ளி மீது கூடுதலாக 1.50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது, அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. கூடுதல் வரி விதிப்பால் கிலோ வெள்ளி விலை 74 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து, 76 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
பெரிய இறக்குமதியாளர்கள் தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்து வைத்துள்ளனர். இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், அதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனால், தங்கத்தை இருப்பு வைத்திருந்த இறக்குமதியாளர்கள் தங்களின் இருப்பை குறைக்க, தங்கத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர். ஆனால், இறக்குமதி வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனால், இறக்குமதியாளர்கள் தங்கத்தின் விலையை மீண்டும் உயர்த்தி விட்டனர். அதன் காரணமாக, ஒரே நாளில் தங்கம் விலை மிகவும் அதிகரித்துள்ளது.
விக்கிரமராஜா, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு: பட்ஜெட் இளைஞர்களுக்கும், விவசாயத்திற்கும், நவீனமயமாக்கலுக்கும் முன்னுரிமை அளிக்கிறது.
அரசின் வருவாய்க்கு முக்கிய பங்கு வகிக்கும் வணிகர்களின் நலனுக்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
வணிகர்கள் மற்றும் தொழில் துறையினருக்கான செயல் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. அரசின் வரி வருவாய் உயர்ந்து வரும் தருணத்தில், வணிகர்களின் வாழ்வாதார உயர்விற்கான திட்டங்கள் எதுவும் இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்