உடைந்தது சீக்ரெட்… பாஜக வச்ச செம ட்விஸ்ட்; அதிமுகவில் தீராத குழப்பம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 24 நாட்கள் இருக்கின்றன. அதில் பிப்ரவரி 3 மிகவும் பரபரப்பான நாளாக அமைந்துவிட்டது. டெல்லியில் இருந்து திரும்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்றைய தினம்
எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
ஆகிய இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசினார். என்ன பேசினோம் என்பதை பிற்பகலில் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

பாஜகவின் நோக்கம்

அப்போது பேசுகையில், ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும். நிலையான, உறுதியான வேட்பாளரை நிறுத்த வேண்டும். தனித்தனியாக நிற்காமல், ஒரே அணியாக நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். அதிமுகவை ஒன்றுசேர்க்கவே பாஜக சார்பில் முயற்சிக்கிறோம் என்று கூறினார். அப்படியெனில் முயற்சி மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் உடன்பட மறுத்துவிட்டது தெரியவருகிறது.

எடப்பாடி திட்டவட்டம்

சற்றுமுன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. வேட்பாளரை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என அண்ணாமலையிடம் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இது சி.டி.ரவி செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் உறுதியாகி உள்ளது. அடுத்தகட்டமாக பாஜகவின் பேச்சை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் காய்களை நகர்த்துவார்.

ஓபிஎஸ் நிலைப்பாடு

அவரது வேட்பாளர் போட்டியிட்டால் வாக்குகள் நிச்சயம் பிரியும். இப்படி ஒரு சூழலுக்கு பாஜக விட்டு வைக்குமா? இல்லை ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெற வைக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கிடையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மற்றொரு முக்கியமான விஷயத்தையும் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி வரை காத்திருங்கள்.

வேட்புமனு தாக்கல்

அன்றைய தினம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி தங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்று கூறினார். ஆனால் பிப்ரவரி 7 தான் வேட்புமனு தாக்கல் கடைசி நாள். அதன்பிறகு வேட்புமனுக்கள் மீது பரிசீலனை, திரும்பப் பெறுதல் என பிப்ரவரி 10ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விடும்.

கடைசி நாள் ட்விஸ்ட்

எனவே கடைசி நாள் வரை பாஜக தனது திட்டத்தை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற சந்தேகம் எழுகிறது. ஒருவேளை பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்று விடுவார். ஒன்றுபட்ட அதிமுக என்பது பாஜக மிக முக்கியமாக எதிர்பார்க்கும் விஷயம். இதை வைத்து பல்வேறு கணக்குகளை போட்டு வைத்துள்ளது.

அதற்காக முடிந்த அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி முரண்டு பிடிப்பதால் தேர்தல் ஆணையம் மூலம் இரட்டை இலை சின்னத்திற்கு செக் வைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி எதிர்பாராத ட்விஸ்ட்கள் நிகழக்கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.