'பாஜகவும் எனக்கு துரோகம் செய்துவிட்டது'.. உடைத்து பேசும் காயத்ரி ரகுராம்

தமிழக பாஜகவில் தமிழ் வளர்ச்சி கலாச்சார பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் காயத்ரி ரகுராம். நடிகையாக இருந்த இவர் பிரதமர் மோடியின் மீதான ஈர்ப்பால் பாஜகவில் இணைந்து செயல்பட்டு கொண்டிருந்தார். இந்த நிலையில், கட்சி பேருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி அவரை 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அதனை அடுத்து அண்ணாமலை குறித்து தொடர்ந்து விமர்சித்து ட்வீட் போட்டு வருகிறார் காயத்ரி ரகுராம்.

இதற்கிடையே, கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்த பிறகும்கூட அண்ணாமலையை விடுவதாக இல்லை. அனுதினமும், அண்ணாமலை மீது பல்வேறு குற்றசாட்டுகளை காயத்ரி ரகுராம் வைத்து வருகிறார். குறிப்பாக, தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை வந்த பிறகு வார்ரூம் அமைத்து ஹனிட்ராப் மூலம் பணம் மோசடி செய்யும் கட்சியாக பாஜக மாறிவிட்டது என்று காயத்ரி ரகுராம் கூறியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்து ட்வீட் போட்ட திருச்சி சூர்யா சிவா, ”உனக்கு வார்ரும் நாளும் பிரச்சனை துபாய் ரூம் நாளும் பிரச்சனை. வார்ரும் பத்தி இவ்வளவு அழகா சொல்றியே அப்படியே அந்த துபாய் ரூம் பத்தி தெளிவா சொன்னா தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் மாமி” என்று கிண்டலடித்து பதிவிட்டார். துபாய் ரூம் விவகாரம் நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்தபோதே பயங்கரமாக வெடித்தது. முதன்முதலில் அண்ணாமலைதான் அதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையில் உடைத்தார்.

அப்போது, அவர் ”எனக்கு எதிராக ட்வீட் போட்டு வரும் பெண்மணி துபாய்க்கு எதற்காக சென்றார்; எங்கு தங்கினார்; எந்த திமுக பிரமுகரை சந்தித்தார் என்று எனக்கு தெரியும். அனைத்து ஆதாரமும் என்னிடம் உள்ளது” என்றார் அண்ணாமலை. அதற்கு பிறகுதான் அண்ணாமலையை விடாமல் வம்பிழுத்து வருகிறார் காயத்ரி ரகுராம்.

இந்த நிலையில், இன்று மீண்டும் ட்வீட் போட்டுள்ள காயத்ரி ரகுராம்; நான் 8 ஆண்டுகள் பாஜகவால் வளர்க்கப்பட்டேன். எனது அரசியல் பயணத்தில் பாஜகவும், மோடி ஜியும் முக்கிய பங்கு வகித்தனர். நான் கட்சியை விட்டு வெளியேறினாலும், எனக்கு பிடித்த தலைவர்கள் மீதான எனது மரியாதை அப்படியே உள்ளது. இப்போது நான் சுதந்திரமாக இருக்கிறேன், உண்மையையும் உரிமையையும் பேசுவேன். என்னைப் பற்றி வார்ரூம் மூலம் தவறான செய்திகளைப் பரவி தூண்டி, என் புகைப்படத்தை மார்பிங் செய்து, பிளாக் மெயில் செய்து மிரட்டியவர்கள் மீதுதான் எனக்குக் கோபம். அத்தகைய மலிவான கதாபாத்திரங்கள் எப்போதும் என் தலைவராக இருக்க முடியாது. சில தலைவர்கள் இதுபோன்ற மோசமான செயல்களை ஊக்குவித்தார்கள் ஆனால் கண்டிக்கவில்லை. அந்த வகையில் TNBJP கூட எனக்கு துரோகம் செய்தது” என இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.