தளபதி ரசிகர்களே ரெடியா..!! வெளியானது தளபதி 67 வீடியோ..!!

இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘தளபதி 67’. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாய் எகிற போயுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் தற்போது காஷ்மீரில் முகாமிட்டுள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அப்டேட்டுகள் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளன. அந்த வகையில் ‘தளபதி 67’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குநர்களான கவுதம் மேனன், மிஷ்கின், மலையாளஇளம் நடிகர் மேத்யூ, நடிகை பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர். 

ஏற்கனவே படதின் நடிகர் நடிகைகளின் தகவல்களை வெளியிட்ட படக்குழு தற்போது படத்தின் டைட்டில் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்துச் சென்றுள்ளது. தளபதி 67 படத்தின் டைட்டிலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.காஷ்மீருக்கு விமானத்தில் சென்ற விடியோவை ட்விஸ்ட் வைத்து வெளியிட்டுள்ளது 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.