பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒய்வு அறிவிப்பு..!!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர் ஜோகிந்தர் சர்மா. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ஜோகிந்தர் சர்மா என்று சொன்னாலும் அது மிகையல்ல.

கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் அந்த ஓவரை வீசினார் ஜோகிந்தர் சர்மா. அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் பாகிஸ்தானின் மிஸ்பா அவுட்டாக இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்று சாதித்தது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:- 2002-2017 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள். ஏனெனில் இது விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமை. எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருடனும் விளையாடியது ஒரு முழுமையான பாக்கியம், மேலும் எனது கனவை நனவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி. என்று அவர் கூறினார்.

ஜோகிந்தர் ஐபிஎல்லில் முதல் நான்கு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். 16 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது உள்நாட்டு அணியான ஹரியானாவுக்காக, அவர் 49 முதல்தர போட்டிகள், 39 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 43 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் ஹரியானாவுக்காக போட்டி கிரிக்கெட் விளையாடினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.