"செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது…." தளபதி 67-ன் புதிய அப்டேட்! அப்போ இது LCU தானா?

“நீங்கள் கேட்ட செய்திகள், உடனுக்குடன்” என தளபதி 67 படத்தின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ. அந்த அப்டேட்டிலிருந்து, `அப்போ இது LCU தானா’ என மற்றொரு புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது தளபதி 67. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என பல நட்சத்திர பட்டாளங்களே நடிக்கின்றனர். கொடைக்கானலில் இதன் படப்பிடிப்பு நடந்ததாக சொல்லப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் தளபதி 67 படக்குழு காஷ்மீரில் அடுத்தகட்ட படபிடிப்பை நடத்தி வருகிறது.

image

இந்த நிலையில், பிப்ரவரி 1, 2 மற்றும் 3ம் தேதிகளில் தொடர்ந்து தளபதி 67 குறித்த அப்டேட்கள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் மைக்கேல் பட நிகழ்ச்சியின் போது முன்னர் கூறியிருந்தநிலையில், அதன்படி தொடர்ச்சியாக தளபதி 67 பற்றிய அப்டேட்களை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டு வந்தது. அதில் முதல் அப்டேட்டாக படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் இடம்பெற்றிருந்தது.

image

அதற்கடுத்தபடியாக படத்தின் பூஜை குறித்த போட்டோவையும், அதன் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தியது படக்குழு. அதில் விஜய், லோகேஷ், த்ரிஷா, அர்ஜூன், ப்ரியா ஆனந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரும் பங்கேறிருந்திருந்தார்கள். தளபதி 67 பூஜை வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு ட்ரெண்டிங்கில் இணைந்தது.

image

இந்நிலையில் அடுத்த அப்டேட் எங்கே என தொடர்ந்து ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் மீதான நம்பிக்கையில் அதிக எதிர்ப்பார்ப்புகளை வெளிப்படுத்திய நிலையில், தளபதி 67 படத்தின் பெயர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ மற்றும் டைரக்டர் லோகேஷ் மட்டுமின்றி, இசையமைப்பாளர் அனுருத் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் அடுத்தடுத்து டிவிட்டரில் தங்களுடைய பதிவை பதிவிட்டனர்.

படத்தின் பெயர் குருதிபுனலாக தான் இருக்கும் குருதியாக தான் இருக்கும் என ரசிகர்கள் தொடர்ந்து வைப் மோடில் இருந்துவரும் நிலையில், தற்போது மீண்டுமொரு அப்டேட்டை விட்டிருக்கிறது படக்க்குழு.

நீங்கள் கேட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது உங்கள் ஒளிப்பதிவாளர்- 7ஸ்கீரின் ஸ்டுடியோ

படத்தை குறித்த அடுத்த அப்டேட்டாக படக்குழு விமானத்தில் பயணிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளது 7ஸ்கீரின் ஸ்டுடியோ. அந்த வீடியோவை ”நீங்கள் கேட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது உங்கள் ஒளிப்பதிவாளர்- 7ஸ்கீரின் ஸ்டுடியோ” என்ற கேப்சனை பதிவிட்டு பகிர்ந்துள்ளது.

படக்குழுவுடன் பயணித்திருக்கும் ஏஜண்ட் டீனா, அப்போ இது LCU?

image

பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் படக்குழு நபர்களுடன், விக்ரம் படத்தில் ஏஜண்ட் டீனாவாக நடித்த நடிகை வசந்தியும் உடன் பயணித்திருப்பதால், அவரின் புகைப்படத்தை மட்டும் எடுத்து வைரலாக பகிர்ந்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். முன்னதாக படபூஜை தளத்தில் கைதி படத்தில் போலீஸாக நடித்த நடிகர் ஜார்ஜ் மரியானும் இடம்பிடித்திருந்ததும், தற்போது ஏஜண்ட் டீனாவாக நடித்த நடிகையும் உடன் பயணித்திருப்பதால், நிச்சயம் இது LCUவாக தான் இருக்கும் என பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.