புடினின் சிவப்பு கோடு மீறப்படும்… மாஸ்கோ மீதான தாக்குதல் உறுதி: ரஷ்யாவில் பரபரப்பு


உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட விளாடிமிர் புடினின் மாஸ்கோ அரண் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்புகள் அதிகரித்துவருவதாக ரஷ்யாவின் மூத்த அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கும்

ரஷ்யாவின் முன்னாள் துணை வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ஃபெடோரோவ் என்பவரே, தற்போதைய சூழல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், விளாடிமிர் புடினின் சிவப்புக் கோடுகளில் ஒன்றைக் கடக்கும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தல் இதுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புடினின் சிவப்பு கோடு மீறப்படும்... மாஸ்கோ மீதான தாக்குதல் உறுதி: ரஷ்யாவில் பரபரப்பு | Putin Red Line Crossed Moscow Attack Happen

@getty

மட்டுமின்றி, உக்ரைன் மீதான தனது படையெடுப்பை முழு அளவிலான உலகப் போராக மாற்றுவதற்கும் புடின் திட்டமிட்டு வருவதாக அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மாஸ்கோ மீது தாக்குதல் உறுதி என குறிப்பிட்டுள்ள ஃபெடோரோவ், அது முயற்சியல்ல திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கும் என்றார்.

அது விளாடிமிர் புடினின் சிவப்புக் கோட்டினை கடக்கும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யாவின் படையெடுப்பினை, உக்ரைன் இதுவரை தடுப்பாட்டத்தால் தான் எதிர்கொண்டு வந்துள்ளது.

மேலும், ரஷ்ய தாக்குதல் வியூகங்களை விடவும் உக்ரைனின் தந்திரங்கள் மெச்சும்படியாக இருந்தது என போர் தொடர்பான நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை ரஷ்யா புகழ் பாடிவந்த ஊடகங்கள் மெதுவாக உக்ரைன் வெற்றி குறித்தும் விவாதிக்கத் தொடங்கியுள்ளது.

மாஸ்கோ தாக்கப்படுவது உறுதி

ரஷ்ய நகரங்கள் மீது இனி உக்ரைன் தாக்குதலை முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக ஃபெடோரோவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மாஸ்கோ தாக்கப்படுவது உறுதி எனவும், தமது முதன்மை நகரங்களை காக்க புடினால் முடியாமல் போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புடினின் சிவப்பு கோடு மீறப்படும்... மாஸ்கோ மீதான தாக்குதல் உறுதி: ரஷ்யாவில் பரபரப்பு | Putin Red Line Crossed Moscow Attack Happen

@chathamhouse

மேலும், உக்ரைனுக்கு அனுப்பிய வீரர்களில் சரிபாதி அளவுக்கு ரஷ்யா இழந்துள்ளது எனவும், உக்ரைன் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 400,000 வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், இவர்களால் இனி போரிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஓராண்டு கால போரில் ரஷ்யா விமானப்படை பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது என்கிறார் முன்னாள் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.