Leo – Bloody Sweet: பெயர் காரணம்… LCU… மறைமுக தகவல்கள் என்னென்ன?

Leo Promo Hidden Details: விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு லியோ என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதன் அறிவிப்பு வீடியோவில் மறைந்திருக்கும் தகவல்கள் குறித்து இங்கு காண்போம்.

Leo Promo Hidden Details: விஜய் – லோகேஷ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் படக்குழுவினரால் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ‘விக்ரம்’ ஸ்டாலில் இப்படத்தின் லைட்டில் அறிவிப்பும் வீடியோ மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. 

இப்படத்திற்கு, ‘லியோ’ என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தை போன்று இப்படத்திற்கும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 நிமிடம் 48 விநாடிகள் உள்ள அறிவிப்பு வீடியோவில் விஜய் Bloody Sweet என கூறுவது டைட்டில் கார்டிலும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, படத்தின் பெயர் காரணம் குறித்தும், டைட்டில் வீடியோவில் கொடுக்கப்பட்ட மறைமுக தகவல்கள் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன. 

Trademark சுத்தியல்

ஒரு சாக்லெட் பாக்டரி அறையில் தொடங்கும் அந்த வீடியோவில் விஜய் சாக்லேட் தயாரித்து கொண்டிருக்க, அதோபோன்று மறுபக்கம் ஆயுத பட்டறையில் ஒரு வாளையும் விஜய் உருவாக்கிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. மேலும், விஜயின் இருப்பிடத்தை நோக்கி வரிசையாக சொகுசுகள் கார்கள் பாய்ந்து வந்துகொண்டிருந்தன. 

சாக்லேட், வாள் ஆகியவற்றை மாறி மாறி காண்பித்துவிட்டு கடைசியில் சாக்லேட்டில் அந்த வாளை நுழைத்து, அதனை சுவைத்துபார்த்து, அங்கு வந்திருக்கும் கார்களை நோக்கி, விஜய் ‘Bloody Sweet’என கூறுகிறார். அப்போது, ‘லியோ’ என சாக்லேட் காய்ன் வடிவில் டைட்டில் காட்டப்படுகிறது. அதில், ‘Bloody Sweet’என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. இதிலும், விஜய் தனது ட்ரேட்மார்க் சுத்தியல் உடன் தோன்றுகிறார்.

சிலுவை…

இதைத்தொடர்ந்து, லியோவின் பெயர் காரணமும் தெரியவந்தது. லியோ என்றால் லத்தின் மொழியில் சிங்கம் என்று அர்த்தம் என கூறப்படுகிறது. 12 ராசிகளிலே உள்ள சிம்ம ராசியின் ஆங்கில பெயரும் ‘LEO’ என்பது கவனிக்கத்தக்கது. மேலும், அறிவிப்பு வீடியோவின் பின்னர், சிலுவை காட்டப்படுகிறது. 

Leo

மெர்சல் படத்தில் ஜோசப் விஜய் என வலதுசாரிகளால் எழுந்த பிரச்னையை அடுத்து, விஜய் தனது கிறிஸ்துவ அடையாளத்தை மறைக்காமல், அதனை வெளிப்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இதிலும், கிறிஸ்துவராக அவர் நடித்திருப்பார் எனவும் கூறப்படுகிறது. கருப்பு – வெள்ளை தாடி கெட்டப்பில் உள்ள விஜயை ரசிகர்கள் வியந்து ரசித்து வருகின்றனர். 

மேலும், ஆங்கிலத்தில் மூன்றே மூன்று எழுத்தில் உள்ள பெயர், விஜய் படத்திற்கு முதல்முறையாக  வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும், அக். 19ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையையொட்டி  வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. அக். 23ஆம் தேதி ஆயுத பூஜை ஆகும். இப்படம், Lokesh Cinematic Universe வரிசைப்படமாக இல்லாமல், மாநகரம், மாஸ்டர் போன்று Stand Alone படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.