கழுத்தை நெருக்கும் பொருளாதார நெருக்கடி; அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.!

பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது.

பாகிஸ்தான் மின்சார துறையின் கடன் கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி ரூ.2.253 லட்சம் கோடியாக (பாக். மதிப்பில்) இருந்தது. இது, தற்போது ரூ.2.437 லட்சம் கோடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் மின்சார பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.

அந்தவகையில் கடந்த 23ம் தேதி பாகிஸ்தானில் பல்வேறு நகரங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இது பற்றி அந்நாட்டின் மின் துறைக்கான செய்தித் தொடர்பாளர் இம்ரான் ராணா, சமூக வலைதளமான ட்விட்டரில் இன்று வெளியிட்ட செய்தியில், “வெவ்வேறு நகரங்களின் முக்கிய பகுதிகளில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது என்ற தகவல் எங்களுக்கு வந்துள்ளது. அது பற்றி நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்,” என தெரிவித்தார்.

தற்போது அந்நாட்டு அரசிடம் இருக்கும் வெளிநாட்டு பணத்தை வைத்து இரண்டு மாத காலத்துக்கும் குறைவான தேவையை பூர்த்தி செய்யும் அளவிலேயே இறக்குமதி செய்ய முடியும் என்பதால் பாகிஸ்தான் தற்போது அந்நிய செலாவணியை திரட்டுவதற்கான அவசரத் தேவையில் உள்ளது.

அரசின் கைவசம் இருக்கும் அந்நியச் செலாவணி இருப்பு மிகவும் வேகமாகத் தீர்ந்து வருவதால் இறக்குமதிச் செலவை கட்டுப்படுத்தவும், தற்போது இருக்கும் வெளிநாட்டுப் பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அரசு உள்ளது.

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை அடுத்து, பாகிஸ்தான் அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்தநிலையில் பொருளாதார நிலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, தீவிரவாதம் மற்றும் அரசியல் சிக்கல் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் முக்கிய எதிர்கட்சி தலைவர் இம்ரான் கானுக்கு பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் அழைப்பு விடுத்துள்ளார்.

திருவாரூர் – மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் பாதிப்புகள் நேரில் ஆய்வு

முன்னதாக பொருளாதார நிலை குறித்து பேசிய பிரதமர், ‘‘நான் விவரங்களுக்குச் செல்லவில்லை, ஆனால் நமது பொருளாதார சவால் கற்பனை செய்ய முடியாதது என்று மட்டுமே கூறுவேன். சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் உடன்பட வேண்டிய நிபந்தனைகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. ஆனால் நிபந்தனைகளுக்கு நாம் உடன்பட வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.

‘என்னை கொல்ல சதி ’ – இம்ரான் கான் கதறல்.!

பாகிஸ்தான் அரசுக்கு
சர்வதேச நாணய நிதியம்
கொடுக்க இருந்த 600 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் பெறும் நோக்கில் கடந்த வாரம் பாகிஸ்தான் அமைச்சரவை 4,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பட்ஜெட்டை வகுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அரசுக்கு வழங்குவதாக இருந்த தொகை 2019ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் எவ்வாறு அந்த பணத்தை திரும்ப செலுத்தும் என்று கேள்விகள் எழுந்த பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.