Viduthalai: வெற்றிமாறன் படத்தில் தனுஷ் செய்துள்ள காரியம்: வெளியான மாஸ் தகவல்.!

வெற்றிமாறன் தற்போது சூரி நடிப்பில் ‘விடுதலை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இந்நிலையில் ‘விடுதலை’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூரியை ஹீரோவாக்கி ‘விடுதலை’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார் வெற்றிமாறன். இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் முதன்முறையாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார் சூரி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற ‘விசாரணை’ படம் போலவே இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப்படம் தயாராகி வருகிறது. எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இரண்டு பாகங்களாக உருவாகி வந்த இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக தயாரிப்பு தரப்பு தெரிவித்தது. இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் செம வைரலானது.

Thalapathy 67: சொன்னதை செய்த லோகேஷ் கனகராஜ்: அப்போ 100% சம்பவம் கன்பார்ம்.!

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ‘விடுதலை’ படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசைஞானி இளையராஜாவின் இசையில் தனுஷ் பாடிய பாடல் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. வெற்றிமாறனின் படத்தில் தனுஷ் பாடியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Leo: இதுக்காகவே லோகேஷை பாராட்டலாம்: உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்.!

‘விடுதலை’ படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. ‘விடுதலை’ படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்திற்கான வேலையை வெற்றிமாறன் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.