புதுடெல்லி: கடந்த 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1950ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி முதல் இந்திய உச்ச நீதிமன்ற நீதி பரிபாலனம் நடைமுறைக்கு வந்தது. உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு தற்ேபாது 73 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்று, ‘மாறும் உலகில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடந்தது. இந்திய வம்சாவளியும், சிங்கப்பூர் தலைமை நீதிபதியுமான சுந்தரேஷ் மேனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் நடந்த அமர்வில், சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனும் பங்கேற்றார். அப்ேபாது இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை நடைமுறைகளை கவனித்தார். அதன்பின் நடந்த கருத்தரங்கில் சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் உரையாற்றினார்.