ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்
இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரியுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் மூன்று நாட்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கோரும்
எடப்பாடி பழனிசாமி
முடிவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்ற விசாரணை
சின்னம் ஒதுக்குவது பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் தான் முடிவெடுப்பார் எனத் தெரிவித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இரட்டை இலை சின்னத்தை முடக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. உடனே இருவரும் சமாதானமாக செல்லலாம் என்று எடப்பாடி பழனிசாமி,
ஓ.பன்னீர்செல்வம்
ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
பொது வேட்பாளர்
ஆனால் எடப்பாடி தரப்பு அதை ஏற்கவில்லை. எங்கள் தரப்பு வேட்பாளரை ஓபிஎஸ் அங்கீகரிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பு கூறியது. இல்லை பொது வேட்பாளரை தேர்வு செய்யலாம் என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது. அதற்கு, இருவரும் முரண்டு பிடிக்கிறீர்கள். நாங்கள் சில தீர்வை கொடுக்க விரும்புகிறோம். உங்கள் பிரச்சினைகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு போய்விட முடியும்.
பழனிசாமி கையெழுத்திடுவாரா?
ஆனால் நீதிமன்றம் அவ்வாறு செல்ல விரும்பவில்லை. இருவரும் கையெழுத்திட வேண்டாம். எங்களிடம் விட்டு விடுங்கள். நாங்கள் உத்தரவு பிறப்பிக்கிறோம்.
ஆதரவு வேட்பாளர் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டாரா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும் வேட்புமனுவுடன் சமர்பிக்கப்படும் ஏ, பி படிவங்களில் பழனிசாமி கையெழுத்திடுவாரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதிமுக பொதுக்குழு முடிவு
தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால் நாங்கள் முக்கிய உத்தரவு எதையும் பிறப்பிக்க விரும்பவில்லை. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும். இந்த முடிவை ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் கையெழுத்திடுவது பற்றி அவர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்சியின் இரு துருவங்களும் ஒன்றுபடுமா?
பொதுக்குழு எடுக்கும் முடிவை தேர்தல் ஆணையத்திற்கு அவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழுவில் யாருக்கு சாதகமாக முடிவுகள் இருக்கும். யார் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது. ஏனெனில் இதுவரை இரு துருவங்களாக பிரிந்து நிற்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்பாளர் விஷயத்தில் ஒன்றுபடுவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.