தமிழகத்தில் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூடுதல் தலைமை செயலாளர் பனீந்தர ரெட்டி வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘‘சென்னை மாநாகராட்சியில் சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த கிரண் சுருதி, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளராக இருந்த தீபா சத்யன், சென்னை மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன். சிஐடியின் சிலை கடத்தல் பிரிவிற்கு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் சென்னை மாநகராட்சியில் கொளத்தூர் மாவட்ட துணை ஆணையராக இருந்த ராஜாராம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் டிஜிபி அலுவலகத்தில் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராவலி பிரியா கந்தபுனேனி, தமிழ்நாடு சீறுடை பணியாளர் தேர்வாணையத்தின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்’’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கடந்த புத்தாண்டு தினத்தன்று தமிழ்நாடு அரசு 45 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பணி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் அடுத்த 10 நாட்களில் அதாவது கடந்த ஜனவரி 11ம் தேதி மீண்டும் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் 7 பேருக்கு பதவி உயர்வும் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய கருணாசாகர், காவலர் நலப்பிரிவு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் காவலர் நலப்பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை மைலாப்பூர் துணை ஆணையர் ரோகித் நாதன் ராஜகோபால், சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை – சிந்தாமணி பகுதியில் கதிர் அருப்பு திருவிழா
இதேபோல் மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பி. மேகலினா ஐடேன், தென் மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி-யாக நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் தென்காசி காவல் கண்காணிப்பாளராக சாம்சனும், தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் ராவத்தும் நியமனம் செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் எஸ்பியாக இருந்த முத்தரசி, சிபிசிஐடி எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி எஸ்பி செந்தில் குமார் அமலாக்கத்துறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் போலீஸ் பயிற்சி கல்லூரி எஸ்பியாக இருந்த செல்வராஜ், சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது பேசுபொருளாகியுள்ளது.