போலீஸின் கண்ணெதிரே சுதந்திரமாய் சுற்றித்திரிந்த மாஃபியா கில்லர்; 16 வருடங்களுக்குப் பிறகு கைது!

63 வயது இத்தாலிய மாஃபியா கில்லர் (Italian mafia killer) ஒருவர் 16 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸில் போலீஸாரால் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கிறது, சாதாரணமாக எல்லா இடங்களிலும் நடப்பதுதானே என்று தோன்றலாம்.

மாஃபியா கில்லர் கைது

ஆனால் இந்தச் சம்பவம் பேசப்படுவதற்குக் காரணம், சம்பந்தப்பட்ட மாஃபியா கில்லர் எட்கார்டோ கிரேகோ (Edgardo Greco), போலீஸ் கண்ணெதிரே சாதாரண நபராக எந்தவொரு முகமூடியும் இல்லாமல் சுற்றித் திரிந்து வாழ்ந்துவந்திருக்கிறார். குறிப்பாக உள்ளூர் பத்திரிகைகளில்கூட இந்த நபர் வந்திருக்கிறார்.

இது குறித்து வெளியான தகவலின்படி எட்கார்டோ கிரேகோ, இத்தாலியிலுள்ள ‘Ndrangheta’ எனப்படும் மோசமான மாஃபியாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இப்படியிருக்க, 1991-ம் ஆண்டு ஜனவரியில், மாஃபியா சண்டையின்போது ஸ்டீபனோ (Stefano), கியூசெப் பார்டோலோமியோ (Giuseppe Bartolomeo) என்ற சகோதரர்கள் கொல்லப்படுகின்றனர். அதோடு இவர்களின் உடல்கள் அமிலத்தில் கரைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் எட்கார்டோ கிரேகோவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது.

எட்கார்டோ கிரேகோ (Edgardo Greco) – மாஃபியா கில்லர்

ஆனால் கொஞ்ச நாள்களுக்குப் பிறகு எட்கார்டோ கிரேகோ காணாமல் போகிறார். அதன்பிறகு எட்கார்டோ கிரேகோ, பிரான்ஸில் பாலோ டிமிட்ரியோ (Paolo Dimitrio) என்ற பெயரில், பல இத்தாலிய உணவகங்களில் சமையல்காரராக வேலைபார்க்கிறார். நாள்கள் இப்படியே போக, 2021-ல் `Caffe Rossini Ristorante’ என்ற உணவகத்தைத் திறந்திருக்கிறார். உணவகத்தின் திறப்புவிழா செய்தி உள்ளூர் பத்திரிகைகளிலும் வெளிவருகிறது.

மாஃபியா கில்லர் கைது

அப்போது பத்திரிகைகளும், அவரை ஓர் இத்தாலியன் என்றும், செயின்ட்-எட்டியெனிலிருந்து(Saint-Etienne) வந்தவரென்றும் விவரித்தநா. இந்த நிலையில்தான், எட்கார்டோ கிரேகோ தற்போது 16 வருடங்களுக்குப் பிறகு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.