சென்னை: அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புறக்கணித்துள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரிமை, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்று வைத்திலிங்கம் கூறியுள்ளார். நடுநிலை தவறி ஒருசிலரின் கைப்பாவையாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் செயல்பட்டுள்ளார். தமிழ்மகன் உசேனின் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.