யாருமே இல்லையே! மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்த நடுத்தர வயது பெண்.. சிக்கிய கடிதம்


தமிழகத்தில் மகன் இறந்தநாளில் 37 வயதான பெண் தனது மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாமி கும்பிட்டு விட்டு தற்கொலை

சிவகாசியை சேர்ந்தவர் பாண்டி தேவி(37). இவரது கணவர் சாலைமுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு புவனேஸ்வரி (17) என்ற மகளும், மகாராஜா என்ற மகனும் உள்ளனர்.

பாண்டிதேவி சித்துராஜபுரத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மகாராஜா கடந்த 2022 ஜனவரி 3- ம் திகதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.
புவனேஸ்வரி சிவகாசியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மகனின் நினைவு நாளில் சாமி கும்பிட்டு விட்டு பாண்டிதேவி மற்றும் அவரது மகள் புவனேஸ்வரி இருவரும் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

யாருமே இல்லையே! மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்த நடுத்தர வயது பெண்.. சிக்கிய கடிதம் | Women Died With Daughter Tamilnadu

பணத்தை..

சம்பவம் குறித்து விசாரித்த பொலிசார் பாண்டிதேவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அதில், தனது தந்தை, அண்ணன்கள், கணவன், மகன் என எல்லோரும் இறந்துவிட்டதாகவும், வீட்டில் ஆண் என யாருமே இல்லாமல் தாய் மற்றும் மகளுடன் வசித்து வந்ததாகவும், தொடர்ந்து வாழ பிடிக்காமல் இந்த முடிவை எடுப்பதாக உருக்கமாக எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

தனக்கு சொந்தமான வீட்டை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது தாய் ஞானபழத்தின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.