தமிழ் சினிமா உலகத்துக்கு நற்சான்று அளிக்கும் பிகில் பட நாயகி!

கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூரில் தனியார் நகைக்கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ‘பிகில்’ பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தற்போது ‘ஹனுமன்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். தமிழ் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமை உள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

கோவைக்கு நான் சிறுவயதிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். கல்லூரி படிக்கும்போது பலமுறை கோவை வந்துள்ளேன். ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் புது அனுபவமாக உள்ளது.

Samantha: 30 கிலோ புடவை… 3 கோடி ரூபாய் மதிப்பில் நகை… சகுந்தலம் படத்திற்காக ரிஸ்க் எடுத்த சமந்தா!

எனக்கு கோவை உணவு என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் கோவை உணவை ருசிப்பதில் ஆர்வமாக இருப்பேன். நேற்று இங்கு ஒரு இனிப்பு வகையை சாப்பிட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்று அமிர்தா ஐயர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.