திருவாரூர்: நெல் ஈரப்பதம் 19%ஆக இருந்தாலும் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். ஞாயிற்றுக் கிழமைகளிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்ய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர் அருகே முதல் சேத்தியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து வருகிறார். நெல் அதிகம் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களின் அருகே மற்றொரு கொள்முதல் திறக்கவும் அமைச்சர் உத்தரவு அளித்துள்ளார்.