மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, குடிபோதையில் பாத்திரத்தை தன் மீது வீசி தாக்கியதாக அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று முன்தினம்(பிப்.,3) நள்ளிரவில் மது போதையில் வந்த வினோத் காம்ப்ளி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். மகன் தலையிட்டு தட்டி கேட்ட போது, சமையலறைக்கு சென்று பாத்திரத்தை எடுத்து வந்து தன் மீது வீசினார். அதில் தனக்கு காயம் ஏற்பட்டு உள்ளது எனக்கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், பாந்த்ரா போலீசார் ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வீட்டிற்கு சென்று சம்மன் அளித்த போலீசார், வினோத் காம்ப்ளியை நேரில் வந்து வாக்குமூலம் அளிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement