சென்னை: சென்னை யானைக்கவுனியில் போலீஸ் என கூறி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்த கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டனர். வழிப்பறியில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் இம்ரான் என தெரிய வந்துள்ளதாக தனிப்படை போலீசார் கூறியுள்ளார். சிசிடிவி கட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்த்தப்பட்டதில் கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டனர்.