சிற்றுண்டிகளின் விலைகளிலும் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையளார்கள் சங்கம் இது தொடர்பில் ஆலோசிப்பதாக கூறப்படுகின்றது.
இதன்படி, சிற்றுண்டிகளின் விலைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் நாளைய தினம் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு விலை அதிகரிப்பு
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமது உற்பத்திகளின் விலையையும் அதிகரிக்க நேரிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலையை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ நிறுவனம் அதிகரித்துள்ளது.
அத்துடன், தமது நிறுவன எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நாளையதினம் தீர்மானிக்கப்படும் என லாப் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.